மாப்பிள்ளை குப்பத்தில் காளிக்கட்டு திருவிழா கோலாகலம். நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் காளிக்கட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் கடந்த செவ்வாய் கிழமை துவங்கிய இந்த விழாவில். நடன காளி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மாப்பிள்ளைக்குப்பம், ஆனைகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வந்தது.
நான்கு நாட்களாக உலா வந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடனமாடும் காளிக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.