தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் யோகா பயிற்றுனர் சரவணன் தியானம் , யோகாசனா செய்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தார்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை ஏற்பாடு செய்திருந்தனர்.