திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேரடி நெல் விதைப்பு ஆள் நடவு எந்திர நடவு என மூன்று வகைகளில் சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் பயிர்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது கொரடாச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை சற்று ஓய்ந்ததால் விவசாயிகள் எந்திரம் மூலம் பூச்சி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.