சுகாதார கட்டிடம் திறப்பு விழா

84பார்த்தது
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுபிரமணியன் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய சுகாதார கட்டிடம் மற்றும் குளிக்கரை பகுதியில் செவிலியர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவற்றினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் திறந்து வைத்தார். இதே போல திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம், உத்தமதானபுரம், கண்டியூர், நுணாகாடு, தீபங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி