பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ச திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை காலம் வரை ஊதியத்தில் உடனே நிரப்பிட வேண்டும்உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைஉடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.