மீண்டும் அறுவடை செய்யும் அளவிற்கு வயல்களில் நெல் முளைப்பு

60பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முழுவது கடந்த ஒரு மாத காலமாக அவ்வபோது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து வாய்க்கால் வரப்புகள், ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் வயல்வெளிகளில் சம்பா தாளடி அறுவடை நிறைவு பெற்றுள்ள நிலையில், அங்கே சிதறிக் கிடந்த நெல்மணிகள் தற்போது மீண்டும் முளைக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்த நெற்பயிற்கள் மீண்டும் அறுவடை செய்யும் அளவிற்கு நன்கு முளைப்புத்திறன் கண்டிருக்கிறது. ஆகையால் இதனை ஆர்வத்துடன் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர். நேரடி விதைப்பு செய்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு முளைப்புத்திறன் கண்டிருக்காத என விவசாயிகள் கூறினர்.

அடுத்த சாகுபடிக்காக வயல்களை பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் நினைத்த நிலையில், வயல்வெளிகளில் தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ளதால் எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயலில் உரங்கள் போட்டு அப்படியே விவசாயம் பணி மேற்கொள்ளலாமா என பல்வேறு கோணங்களில் விவசாயிகள் யோசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதேபோல் ஜூன் 12ஆம் தேதி ஆண்டுதோறும் திறக்கப்படும் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி