நன்னிலம் பேருந்து நிலையத்தின் அருகில் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான
ஆர். காமராஜ் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் துருவி அஞ்சலி செலுத்தினார்.
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்.
"பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் நாம் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் படுகின்ற அல்லல்கள், அவதிகள் இவைகளை எல்லாம் போக்குவதற்கு ஒரே வழி, தமிழகத்தினுடைய விடிவு காலம் பிறப்பதற்கு ஒரே வழி அதிமுக ஆட்சியில் அமர வேண்டும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கு அனைவரும் அயராது உழைப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம் என பேசினார்.
தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நன்னிலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராம. குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி. ஜி. அன்பு, நன்னிலம் நகர செயலாளர் பக்கிரி சுவாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் செல். சரவணன், மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.