இயற்கை உரத்துக்காக ஆட்டுக்கிடை அமைக்கும் விவசாயிகள்

69பார்த்தது
இயற்கை உரத்துக்காக ஆட்டுக்கிடை அமைக்கும் விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் பெரும்பாலான விளைநிலங்கள் தரிசாக உள்ளது. ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் மட்டும் ஒரு சில இடங்களில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பேரளம், பூந்தோட்டம் மற்றும் குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் சில நேரங்களில் கோடை மழை பெய்து வந்தாலும் இந்த மழை சாகுபடிக்கு போதவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் சில இடங்களில் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வயல்களில் மண் வளத்தை பெருக்கவும் இயற்கை உரத்துக்காகவும் விவசாயிகள் மாடு, ஆடு கழிவுகளை (சானங்களை வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்து வருகிறார்கள். அதன்படி தற்போது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை அதிக அளவு கொண்டு வந்து நன்னிலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வயல்களில் ஆட்டு கிடை அமைத்து வருகிறார்கள்.

நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுக்கிடை அமைக்க ஒரு நாளைக்கு 1500 ரூபாய் செலவாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். இவ்வாறு சாகுபடிக்கான அனைத்து பணிகளையும் விவசாயிகள் செய்து வந்தாலும் தடையின்றி போதிய அளவு மழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை தற்பொழுது உள்ளது.

தொடர்புடைய செய்தி