கர்நாடகா அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு.

நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கர்நாடகா அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு காவேரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி இதுவரையிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை.

தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கத்தோடுதான் கர்நாடகா அரசு மேகதாட்டு அணையின் குறுக்கே அணைக்கட்டு துவங்கியுள்ளது அணைக்கட்டை துவங்கியும் அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் மத்திய அரசு செவிசாய்க்காமல் கர்நாடகா அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி.

மத்திய அஞ்சலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும் கர்நாடகா அரசுக்கு எதிராகவும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி