வெள்ளக்குடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

54பார்த்தது
ஓஎன்ஜிசி யில் வேலை இழந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி தொழிற் சங்கத்தினர் வாயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருவாரூர் அருகே வெள்ளக்குடி பகுதியில் அமைந்துள்ள ஓ என்ஜிசி நிறுவனத்தின் பிளாண்ட் அமைந்துள்ளது இங்கிருந்து சேகரிகப்படும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நாகை மாவட்டம் நரிமனத்திற்க்கு பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இங்கு பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி வாயில் வாசலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 25ஆண்டுகளாக கிரேன் ஆபரேட்டர் மற்றும் சீலிங்கர்ராகவேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு தற்போது வந்துள்ள கிரேனில் வேலை பிரித்து வழங்கிட கோரியும், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒ என் ஜிசி தலையிட்டு வேலையை பகிர்ந்து 15 நாள் என்ற அடிப்படையில் வேலை வழங்க கோரியும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி