திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இஞ்சிகுடி சோதனைச் சாவடியில் நேற்று (ஜூன் 11) காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பூந்தோட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 100-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநிலக் காரைக்கால் சாராயப் பாட்டில்களை தனது இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக எடுத்துவந்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் விக்னேஷிடம் இருந்த சாராயப் பாட்டில்களைப் பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விக்னேஷை சிறையிலடைத்தனர்.