பருத்திக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

75பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50, 000 ஏக்கருக்கு மேலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முழுதும் கடந்த மாதம் பெய்த கோடை மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.

பெய்த கனத்த மழையினால். பல இடங்களில் பருத்தி பயிரில் பூக்கள் கொட்டியும், பஞ்சு உருவாகும் தருணத்தில் உள்ள காய்கள் காய்ந்தும், சில இடங்களில் பருத்திச் செடிகளில் வேர்ப்புச் நோய் தாக்கி பருத்தி பயிர் பாதிக்கப்பட்டது.

அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்ட குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதியில். விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து. பயிர் செய்யப்பட்ட பருத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் நிவாரணம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு அதிகாரிகள் கணக்கிட்டு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனவும்.

எஞ்சிய பருத்தி பஞ்சை எடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து சென்றால் மிகவும் குறைந்த விலை போகிறது என வேதனை தெரிவித்தனர்.

எனவே பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக 35 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். எனவும் பருத்திக்கு அரசு அதிகபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும். எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி