என்கண் பகுதியில் நீண்ட அரிவாளோடு நின்ற நபர் அதிரடி கைது.

65பார்த்தது
என்கண் பகுதியில் நீண்ட அரிவாளோடு நின்ற நபர் அதிரடி கைது.
குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்கண் வெட்டாற்று பாலம் பகுதியில் குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குற்றம் செய்யும் நோக்கத்தோடு 2-அடி நீளமுள்ள அரிவாளோடு நின்று கொண்டிருந்த- குடவாசல் தாலுக்கா, என்கண், திருமஞ்சன வீதியை சேர்ந்த விஜயராகவன் (வயது-26) என்பவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் தொடர்ந்து ஆயுதங்களோடு பொது இடங்களில் சுற்றி வந்துள்ளார் அந்த இளைஞர். மேலும், இவர் பிறரை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களோடு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனை நீக்கம் செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறப்பாக செயல்பட்டு நபரை கைது செய்த குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அவர்கள் பாரட்டினார்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி