இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட மேலாவாசல் கிராமத்தில் இன்று "மேலவாசல் வாசிக்கிறது" என்னும் தலைப்பில் இரண்டாவது வார நிகழ்வாக பெண்களுக்கான "மகளிர் மட்டும்" புத்தக வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.
போட்டி தேர்வு குறித்து தஞ்சாவூர் மாவட்ட உதவி கருவூல அலுவலர் பிரகாஷ் கூறும்பொழுது மத்திய அரசு நடத்தும் தேர்வுகளுக்கு பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது, அதேபோல் வேலைக்கு வந்த பிறகு பெண்கள் தங்குவதற்கு என விடுதிகளும் உள்ளது அதேபோல் போட்டி தேர்வு மாணவிகள் பயில்வதற்கு நூலகங்கள் பெரிதும் உதவுவதாக தெரிவித்தார். போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் ஜெஸ்ஸிபிரஸ்கா, துளசி, கார்த்திகா மற்றும் ஐஏஎஸ் தேர்விற்கு பயின்று வரும் மாணவி பிரதிக்ஷா ஆகியோர் அவர்களின் அனுபவ பகிர்வு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக நாட்டாரியல் துறைத்தலைவர் முனைவர் காமராசு கலந்துகொண்டு புத்தக வாசிப்பு மட்டுமே தற்சார்பை தரும் போட்டித் தேர்வு மாணவர்கள் நாளிதழ்கள் படிப்பது மிகவும் அவசியம் அதற்கு அனைவரும் தினம் நூலகம் செல்ல வேண்டும் என்று கூறி கலந்து கொண்டவர்களுக்கு போட்டி தேர்வு மாதிரி வினாத்தாள்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலவாசல் நூலக பொறுப்பாளர் மற்றும் வாசகர் வட்ட நண்பர்களுடன் செய்திருந்தனர்.