தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா. 854 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) 854 பட்டதாரிகளின் கல்வித்தகுதியை அங்கீகரிக்கும் வகையில் 8வது பட்டமளிப்புவிழாவை நடத்துகிறது. தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழுவின் (NAAC) அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டின் இரண்டாவது சுழற்சியில் 3. 44 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அண்மையில் A+ (A Plus) தரவரிசையைப் பெற்றுள்ளதால், இந்த ஆண்டின் பட்டமளிப்புவிழா சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. B++ இலிருந்து A+ க்கு இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி பல்கலைக்கழகத்தின் சிறப்பான மற்றும் தொடர்ச்சியான கல்விசார் முன்னெடுப்புக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.
இப்பட்டமளிப்பு விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 467 பெண்களும் 387 ஆண்களுமாக 854 பட்டதாரிச் சாதனையாளர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.