அகில இந்திய அளவில் சப் ஜூனியர் தாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகன் வீரசெல்வம் செந்தில்குமார் நீளம் தாண்டுதலில் 5. 13 மீ தாண்டி வெள்ளி பதக்கத்தையும், குண்டு எறிதலில் 8. 6 மீ தூரம் எரிந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார். தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினார்.