மன்னார்குடி ஹனிபா நகர் பூங்காவை ஆய்வு செய்த நகரமன்ற தலைவர்
மன்னார்குடி நகர் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட பல்வேறு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி முதல் சிறிய மழைநீர் வடிகால் வரை தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி யானைவிழுந்தான் குளம் அருகே உள்ள ஹனிபா நகரில் உள்ள பூங்கா பழுதடைந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனை மன்னார்குடி நகரமன்றத் தலைவர் மன்னை சோழராஜன் அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.