அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் மாவட்ட குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினர் பாப்பையன் தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துறை அருள் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும் எம் பி யும் ஆன வை. செல்வராஜ் கலந்துகொண்டு பேசுகையில் தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வரும் 11ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெறும் மாவட்ட மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.