திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த பல நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஒரு மணி வரை காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசியதால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மழையால் மன்னார்குடி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிறுவியது.