வைகாசி பௌர்ணமியையொட்டி மன்னார்குடியில் முதல் முறையாக 11 உதய கருட சேவை நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்டு தோறும் வைகாசி பௌர்ணமி தினத்தில் ஒரே நேரத்தில் இரண்டு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஒரே இடத்தில் 11கருட சேவை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. மன்னார்குடி, சேரன்குளம், சாத்தனூர், ஏத்தக்குடி, திருமக்கோட்டை, இருள்நீக்கி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள 11கருட வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் பெருமால் மன்னார்குடிக்கு எடுத்து வரப்பட்டார். பின்னர் சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.