மன்னையில் நாளை சூரிய பிரபை விழா

64பார்த்தது
மன்னையில் நாளை சூரிய பிரபை விழா
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பலவிதமான வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. 18 நாட்கள் நடைபெறும் விழாவில் தங்க சூரிய பிரபை, கருட சேவை, வெண்ணைத்தாழி, தங்கக்குதிரை தேர் உள்ளிட்ட விழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். அந்த வகையில் 27ஆம் தேதியான நாளை இரவு தங்க சூரிய பிரபை வாகன வீதி உலா கண்கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி