மன்னார்குடியில் விஜயகாந்த்நினைவு நாளை அனுசரித்த த. வெ. க வினர்

63பார்த்தது
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அக்கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் விஜயகாந்தின் நினைவு தினம் தமிழக வெற்றி கழக தொண்டர்களால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விஜய்காந்தின் உருவப்படத்திற்கு த. வெ. க தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் த. வெ. க திருவாரூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் யூ. வி. எம். ராஜராஜன் மற்றும் த. வெ. க தொண்டர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி