மன்னார்குடியில் தந்தை பெரியாரின் சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் டிஆர். பாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பொருளாருமான டி ஆர் பாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட அவரது திரு உருவப்படத்திற்கு மணல் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மன்னார்குடி நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.