திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் ஜே.சி.ஐ மன்னை ஏ.டி.ஏ சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி மன்னார்குடி தேவி பள்ளியில் இன்று நடைபெற்றது. திருவாரூர், திருச்சி, கோவை, மதுரை என 15 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர் பங்கேற்றனர்.
ஏழு முதல் 25 வயதினருக்கு பல்வேறு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சதுரங்க போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.