மன்னார்குடியில் மருத்துவப் பணியாளர்கள் சாலை மறியல்

60பார்த்தது
சென்னையில் இன்று மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வந்தனர் இதை அறிந்த மன்னார்குடி போலீசார் ரயில் நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை விடுதிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மன்னார்குடி தேரடியில் சி ஐ டி யு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், தன்னார்வலர்கள் என்ற பெயரை நீக்க வேண்டும், வேலைப்பளு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதை கண்டித்தும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து மக்கள் நல பணியாளர்கள் மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

CITU சார்பில்

5500, சம்பளம், மதிப்பீட்டு அடிப்படையில் சம்பளம், சுக்காதார துறை மூலம் சம்பளம் வழங்காமல் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி