ராஜகோபால சுவாமி கோவில் ஆணி தெப்பத் திருவிழா

54பார்த்தது
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடக்கும் கோவிலான இங்கு ஆனி மாதம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தெப்ப உற்சவ திருவிழா கடந்த 14-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ராஜகோபாலசாமி கருடவாகனம், யானை வாகனம் என நாள்தோரும் ஒரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்கருக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் நடத்தும் தெப்ப உற்சவம் நேற்று 22-ம் தேதி ஹரித்திரா நதி தெப்பக்குளத்தில் நடைபெற்றது. ராஜகோபாலசாமி வீதியுலா வந்து பின்னர் ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்காக தெப்பம் அழகுற கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், கோவில் செயல் அலுவலர் மாதவன், வர்த்தக சங்க தலைவர் ஆர். வி. ஆனந்த், செயலாளர் ஏ. பி. அசோகன், அமைப்பு செயலாளர் எஸ். எம். டி. கருணாநிதி, பொருளாளர் பிரபாகரன் மற்றும் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர். தெப்ப திருவிழாவை காண மன்னார்குடி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் திரண்டுவந்ததால் மன்னார்குடி நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி