மன்னார்குடியில் நடைபெற்ற வர்த்தக சங்க தேர்தலில் மீண்டும் ஆர். வி. ஆனந்த் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்னார்குடி வர்த்தக சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புத்தக சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது இதில் தலைவர் பதவிக்கு ஏ. பி. அசோகன் ஆர். வி. ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு மகேந்திரன், சரவணன் ஆகியவரும் பொருளாளர் பதவிக்கு ஐயப்பன், மணிகண்டன் ஜெயசெல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஆர். வி. ஆனந்த் 983 வாக்குகள் பெற்று மன்னார்குடி வர்த்தக சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் செயலாளராக சரவணனும் பொருளாளராக ஜெயசெல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.