பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் விவசாய சங்கத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இதில் தமிழக எஸ்.கே.எம். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோரும் அடங்குவர். இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள பஞ்சாப் மாநில முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது உருவப் பொம்மையை எரித்து மன்னார்குடியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.