திருவாரூரில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டம்

52பார்த்தது
திருவாரூரில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டம்
திருவாரூரில் நேற்று (மார்ச். 17) ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் முன்மொழியப்பட்ட திணிப்பு கொள்கையை கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் எஸ். அரவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ம. சந்திரசேகரன், மாநில குழு உறுப்பினர் க. தங்கபாபு, மாவட்ட துணைச் செயலாளர் அ. நிலாதரன், மாவட்ட துணைத் தலைவர் கே. சுஜாதா, கவிஞர் பொன். இளையகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் எஸ். அரவிந்தன், இந்தி எதிர்ப்பு வரலாறு என்பது கடந்த 1930 களிலேயே தொடங்கி விட்டது. 1937 ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ராஜாஜி சென்னை மாகாண பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார். 

இந்த ஆணையை எதிர்த்து நீதி கட்சியினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் தலைமையில் கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதனால் தமிழகத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித் திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மும்மொழிக் கொள்கையை திணித்தால் தமிழகம் திரண்டு எழும் என்றார். போராட்டத்தில் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் பாஸ்கரன், பிச்சைக்கண்ணு, தர்மராஜ், தாஜூதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி