திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா நேற்று இரவு மன்னார்குடியில் சங்கத்தின் கொடியேற்று விழாவில் பங்கேற்று கொடி ஏற்றி வைத்து பேசினார். தமிழகம் முழுவதும் உள்ள தரைக்கடை வியாபாரிகளால் கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆய்வுகளை செய்து போக்குவத்திற்கு பாதிப்பு இல்லாத இடங்களில் மாற்றி அமைக்க வேண்டும். வியாபாரிகள் மீது அபராதம் விதிப்பது கடைகளை சீல் வைப்பது வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களையே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக செய்ய முன் வருவதாகவும் இதன் மூலம் அதிகாரிகளுக்கு வருமானம் ஏதும் வருகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். வணிகர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் வணிகர்களின் வாக்கை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எல்லா கட்சிகளுக்கும் உள்ளது. ஒரு கோடி வணிகர்களை வாக்காளர்களாக உள்ளடக்கியதுதான் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நாங்கள் எந்த திசையை நோக்கி கை காட்டுகிறோமோ அவர்கள் ஆட்சியில் அமரக்கூடிய வாய்ப்பு இருக்கும் எனவே அரசுத்துறை அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு நட்பே இறை எடுத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.