மன்னார்குடி அருகே செயல்பாடின்றி உள்ள ஆழ்துளை எரிவாயு எண்ணெய்க் கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு கசிவு இருப்பதாக கூறப்படும் இடத்தை ஓஎன்ஜிசி பொறியாளர்கள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அந்த கிணற்றை காரைக்கால் நிரவி ஓஎன்ஜிசி பி. பி. சுந்தரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் தமிழ்ஒளி ஆகியோர் ஆய்வு செய்தனர்.