திருவாரூர்: லஞ்சம் பெற்ற டாஸ்மாக் அதிகாரி கைது

577பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவதாஸ். இவர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம் சந்தரிடம், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணி மாறுதல் வேண்டி கேட்டுள்ளார். அதற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தவணை முறையில் 70 ஆயிரம் ரூபாயை சிவதாஸ் ஏற்கனவே வழங்கி உள்ளார்.

உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தற்போது பணம் குறைத்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டபோது அதற்கு குறைக்க முடியாது என திட்டவட்டமாக மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமடைந்த டாஸ்மாக் ஊழியர் சிவதாஸ் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கும் போது அலுவலக உதவியாளர் சரவணன் என்பவர் பணத்தை பெற்றுள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம் சந்தர் தன்னிடம் பணத்தை பெற கூறியதால் பெற்றதாக தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட டாஸ்மார்க் மேலாளரும் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடைபெற்ற வருகிறது.

தொடர்புடைய செய்தி