மன்னார்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த சந்திரசேகரன் மகள் கவிதா (36). இவரது கணவர் மகேந்திரன் (43) நர்சாக பணியாற்றிய கவிதா மீது சந்தேகமடைந்து மகேந்திரன் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவிதா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இறந்த கவிதாவின் உறவினர்கள் மற்றும் அவரது தாய் மாமா ஆனந்த் உள்ளிட்டோர் கவிதாவின் கணவர் மகேந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறந்த கவிதாவின் சகோதரர் முத்துவீரசிவன் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் தனது சகோதரியின் மரணத்தின் சந்தேகம் இருப்பதால் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதித்து இறந்த கவிதாவின் கணவர் மகேந்திரனை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.