கட்டக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டி நிறைவு

59பார்த்தது
மன்னார்குடி அருகே கட்டக்குடியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான இருபாளர் கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் சாய் குஜராத் அணியும், ஆண்கள் பிரிவில் ICF சென்னை அணிகளும் கோப்பையை தட்டி சென்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி கடந்த 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 34 அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான இறுதி போட்டியில் எஸ். பி. எம் கட்டக்குடி, அணியும் சாய் குஜராத், அணியும் மோதின. இதில் சாய் குஜராத் மகளிர் அணி வென்று கோப்பையையும் 2 லட்சத்திற்கான ரொக்க பரிசையயும் தட்டி சென்றது. இதே போல் ஆண்களுக்கான இறுதி போட்டியில் ICF சென்னை அணியும், ஹரியானா 11s அணியும் மோதின. இதில் ICF சென்னை அணி ஹரியானா 11s அணியை வென்று கோப்பையையும் 3 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது.

சுற்றுவட்டார கிராமங்களை நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுவர் சிறுமிகள் என ஏராளமானோர் பங்கற்று விளையயாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி