மூவநல்லூர் கனகாம்பாள் அம்மன் கோவில் முலைப்பாரி திருவிழா

59பார்த்தது
மன்னார்குடி அருகே மூவநல்லூரில் உள்ள கனகாம்பாள் அம்மன் கோவில் முலைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் முலைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவநல்லூரில் உள்ள கனகாம்பாள் அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான முலைப்பாரி திருவிழா இன்று நடைபெற்றது. மூவநல்லூரி கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து முலைப்பாரிகளை தலையில் சுமந்து விநாயகர் கோவில் மற்றும் பிடாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து கும்மிடித்து வழிபட்டனர். பின்னர் தூபமிட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முலைப்பாரிகளை பெண்கள் ஆற்றில் விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு அம்மன் அண்ண வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பிடாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி