மன்னார்குடியில் ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்தை தொழிற் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றாத பல்வேறு திட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் மன்னார்குடியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மன்னார்குடி அருகே ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்த நிலையில் மேலநாகை கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக நேரில் சென்று இடத்தை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ கோட்டசியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் திட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் டிஆர். பி. ராஜா கேட்டறிந்தார்.