மன்னார்குடி: சாலையயின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் ஒயர்

53பார்த்தது
மன்னார்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக தொங்கிய மின் கேபிளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மன்னார்குடி புதுப்பாலம் அருகே திருவாரூர் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் இருந்து எதிர்புரம் உள்ள வீட்டிற்கு இணைப்பு வழங்கப்பட்ட மின் கேபிள் நேற்று திடீரென மிகவும் தாழ்வாக தொங்கியது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் சாலையின் ஒரு புறத்தில் சிறிய மூட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் கேபிளில் உரசாமல் செல்லும்படி செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மிகவும் தாழ்வாக தொங்கிய மின் ஒயரால் திருவாரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி