திருவாரூரில் ஒலி ஒளி அமைப்பின் உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில்
தனி நல வாரியம் அமைப்பது, வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தருவது , சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவாரூரில் ஒலி ஒளி அமைப்பின் உரிமையாளர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கீழவீதி தனியார் மஹாலில் நடைபெற்றது.
கௌரவ தலைவர் டி எஸ் எம் முத்துக்குமார் சாமி வரவேற்புரை ஆற்றினார் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத் தலைவர் சி ஏ பாலு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒலி ஒளி அமைப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் மூத்த உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டுகள் தெரிவித்ததோடு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் சங்கத்திற்கு நல வாரியம் அமைப்பது வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தருவது சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ஹாஜா அன்வர் தீன். செயலாளர் பாலு என்கின்ற குமாரசாமி பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.