மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

77பார்த்தது
மன்னார்குடியில் குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை புறக்கணித்து சாலை மறியல் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை வழக்கறிஞர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த ரயில் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி