வீடு கட்டித்தர மத்திய அரசை வலியுறுத்துவேன் மன்னார்குடி ஜீயர்

74பார்த்தது
பாமணி நரிக்குறவ மக்களுக்கு புதிய வீடு கட்டித்தர மத்திய அரசை வலியுறுத்துவதாக மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் உள்ள சந்திரசேகரபுரம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக 50 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளை கடந்த நிலையில் வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் நேற்று மாலை பாமணியில் நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள் தேவைகள் குறித்து கேட்டரிந்தார். பின்னர் நரிக்குறவ மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மன்னார்குடி ஜீவரிடம் அப்பகுதி மக்கள் வழங்கினர். கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக மன்னார்குடி ஜீயர் உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி