புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

1846பார்த்தது
புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கலைஞர் தெரு சாலையை தார் சாலையாக மேம்படுத்திட நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் (இருபத்து ஐந்து லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைக்கும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து (ரூ. 30லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்ட பெருக வாழ்ந்தாள் ஊராட்சியில் பயணிகள் நிழலகத்திற்கும் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் என். மணிமேகலை முருகேசன், சிபிஐ ஒன்றிய செயலாளர் எம். செந்தில்நாதன், திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி. எஸ். ஆர். தேவதாஸ், ஊராட்சி மன்ற தலைவர், அனைத்து அரசியல் கட்சி முன்னணி தலைவர்கள், ஊர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி