மன்னார்குடியில் தந்தை சகோதரருக்கு கத்தி குத்து

55பார்த்தது
மன்னார்குடியில் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த வாலிபரை தட்டிக்கேட்ட தந்தை சகோதரருக்கு கத்திக்குத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேனியத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று இரவு தனியாக பக்கத்து தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது மன்னார்குடி மன்னைநகர் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் தனது நண்பர்களுடன் சஞ்சீவி ராயன் கோவில் தெருவில் நின்று மது அறுந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாட்டி வீட்டிற்க்கு சென்ற பெண் அந்த வழியாக சென்ற போது விஜய் அந்த பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இலுத்துள்ளார். இதனை அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கோவிந்தராஜ் மற்றும் சகோதரர் பாரதி இருவரும் விஜயை தாக்கியுள்ளனர். அப்போது விஜய் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் மூவரும் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். அப்போது மூவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி