மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலைவகித்தனர். மாணவிகள் அரிசி வெள்ளம் பழம் சர்க்கரை வாழைப்பழம் உள்ளிட்டவைகளை தாம்பூலத்தில் வைத்து சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறையின் சார்பிலும் மாணவிகள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். மாணவிகள் பட்டுப் புடவைகள் அணிந்தும் தாவணி உடுத்தியும் விறகு அடுப்பில் மண்பானையை வைத்து பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூறி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் காளை மாடு அழைத்துவரப்பட்ட மாணவிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் காளை மாடுகள் பூட்டி கரும்பு மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியை மாணவிகள் ஓட்டிச் சென்று மாணவிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர் மேலும் தமிழர்களின் கிராமிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட கூரை வீடுகள் பனை ஓலைகளில் தயாரிக்கப்பட்ட தடுக்குகள் , அம்மிக்கல் ஆட்டுக்கல் பானை சட்டி சுவாமி சிலைகள் பொம்மைகள் போன்றவை களிமண்ணால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர் பல்வேறு திரை இசை பாடல்களுக்கு மாணவிகள் தனித்தனி குழுக்களாக ஒன்று கூடி ஆடி பாடி சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.