நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழ ராஜ வீதியில் நேற்று இரவு 'நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு' எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று, கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகள், புதிய திட்டங்கள், அதனால் பயனுற்ற பயனாளிகள் குறித்து விரிவாக பேசினார்கள்.