கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன்னார்குடி நகரில் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவதற்கும், குடில் அமைப்பதற்கும், வீடுகளை அலங்கரிப்பதற்கும், அலங்கார பொருட்களை கடைகளில் வாங்கி வருகிறார்கள். மன்னார்குடி பந்தளடி, காந்திசாலை பகுதிகளில் உள்ள கடைகளிலும் ஸ்டால் போடப்பட்டுள்ளது. கடைகளில் ஸ்டார் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.