மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதற்காக நீடாமங்கலம் அருகே காலாச்சேரி கிராமத்தில் இருந்து
ஸ்டாலின் அவரது உறவினர் வினோத் இருவரும் இரு சக்கர வாகனத்தில் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்து விட்டு ஊர் திரும்பி உள்ளனர். அப்போது கெழுவத்தூர் கிராமத்தை சேர்ந்த புவனேஷ் என்பவர் மன்னார்குடியில் இருந்து மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தார். இவரது வாகனம் பங்காநாடு என்னும் இடத்தில் சென்ற போது எதிரே வினோத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் வினோத் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலரிந்த திருமக்கோட்டை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.