மேலவாசலில் 75 சவரன் கொள்ளை நடைபெற்ற இடத்தை எஸ். பி ஆய்வு

73பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நாமக்கலில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்று இருந்த நிலையில் இன்று அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து காவல்துறையினருக்கு செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 75 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்கனிப்பாளர் ஜெயகுமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மோப்ப நாய் மற்றும் சிசி டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு அறிவுறுத்ததினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி