கோட்டூர் அருகே அக்கரகோட்டகத்தில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 7 சவரன் நகை 5 லட்சம் மதிப்பிலான வீடு எரிந்து சாம்பலானது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் அடுத்துள்ள அக்கரகோட்டகம் கிராமத்தில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்கள் விவசாயி பன்னீர்செல்வம் தமிழ்செல்வி தம்பதியர். தமிழ்ச்செல்வி மேல்மருவத்தூருக்கு கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று மாலை திடீரென இவர்களின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீடு முழுவதும் தீ பரவி வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் பெரும் சதத்துடன் வெடித்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக விபத்து குறித்து கோட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீ விபத்துக்கான காரணம் குறித்து திருக்களர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனதில் வீட்டிலிருந்த 7 சவரன் தங்க நகை, டிவி, கட்டில், பிரிட்ஜ், பீரோ, என ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் சேதமடைந்தது.