திருக்கல்லீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பாலாலயம்

74பார்த்தது
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கல்லீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பாலாலயம் நடைபெற்றது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு
பக்தர்களின் நன்கொடை மூலம் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா



திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள 2ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வள்ளி சமேத திருக்கள்ளிஸ்வரர் திருக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருதலமாகும் ராஜகோபுரம்
சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும்
புனரமைக்கப்பட்டு
13 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது முதல்பணியாக பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மகா பூர்ணாவதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டு கடங்களில் பூஜைக்கு வைத்த புணித நீரை எடுத்துவந்து அம்பாளுக்கு அபிசேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
இத்தகைய பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்கும் பழமையான இக்கோவிலில்
இந்து சமய அறநிலைத்துறையினர் கும்பாபிஷேக விழாவிற்கான நிதியை ஒதுக்காமல் பக்தர்களின் நன்கொடை கொண்டு கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி