விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை*
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்த ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பை சென்னையைச் சோ்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ள நிலையில் இஸ்ரோவிடம் அக்டோபர் 7 ஆம் வழங்கப்பட்டது
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பரிசோதனை செய்ய புவியின் தாழ்வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் மனிதா்களை அனுப்பி 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னா் மீண்டும் அவா்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் வகையில் ககன்யான் என்ற பெயரில் இஸ்ரோ திட்டத்தை முன்னெடுக்க உள்ளது இதற்காக பல்வேறு கட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
குறிப்பாக விண்வெளியிலிருந்து திரும்ப வரும்போது கடலில் விண்கலத்தை மீண்டும் இறக்கி பாதுகாப்பாக விண்வெளி வீரர்களை தரையிறங்கும் வகையில் பிரத்யேக கலன்களை வடிவமைக்க வேண்டியுள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த தரையிறங்கும் சோதனைக்கான மாதிரி கலன் சென்னை சேர்ந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கபட்டுள்ளது
இதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், உற்பத்திக்கான பிரத்யேக உலோகங்களை இஸ்ரோ வழங்கியது. அதன் அடிப்படையில் ஏறத்தாழ ஓராண்டு காலம் ரூ. 1. 5 கோடியில் 3. 1 டன் எடையில் அந்த மாதிரி கலன் உருவாக்கப்பட்டது.